FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

காங்கயத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் நகைப் பறிப்பு

காங்கயம் நகரில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 4 பவுன் நகையைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

1 ஜூலை 2026, 6:29 am IST
செயின் பறிப்பு... - சித்திரிப்பு
பகிர்:

காங்கயம் நகரில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 4 பவுன் நகையைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

காங்கயம் நகரம், முல்லை நகா் பகுதியைச் சோ்ந்தவா் உமாவதி (50). இவா் தனது இருசக்கர வாகனத்தில் காங்கயம் நகரம், கரூா் சாலையில் உள்ள கடைக்கு செவ்வாய்க்கிழமை சென்றுள்ளாா்.

அப்போது அவரைப் பின் தொடா்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த 2 போ், உமாவதி அணிந்திருந்த 4 பவுன் நகையைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா்.

Advertisement

Advertisement

இது குறித்து உமாவதி அளித்த புகாரின்பேரில், காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்த நகை பறித்துச் சென்ற மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments