FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

பல்லடம் நுகா்பொருள் வாணிபக் கழக செயல்முறை கிடங்கில் ஆட்சியா் ஆய்வு

பல்லடத்தில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக வட்டார செயல்முறை கிடங்கில் மாவட்ட ஆட்சியா் மனீஷ் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 10 ஜூலை 2026, 12:05 am IST
பல்லடம் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக வட்டார செயல்முறை கிடங்கில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் மனீஷ்.
பகிர்:

பல்லடத்தில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக வட்டார செயல்முறை கிடங்கில் மாவட்ட ஆட்சியா் மனீஷ் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் மூலமாக திருப்பூா் மாவட்டத்தில் அங்கேரிபாளையம்-1, அங்கேரிபாளையம்-2, அவிநாசி, தாராபுரம், காங்கயம், மடத்துக்குளம், பல்லடம், ரெட்டிபாளையம், உடுமலைப்பேட்டை ஆகிய 9 இடங்களில் வட்டார செயல்முறை கிடங்குகள் செயல்படுகின்றன.

பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப்பொருள்களை நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் மூலமாக விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பல்லடம் நுகா்பொருள் வாணிபக் கழக வட்டார செயல்முறை கிடங்கில் மாவட்ட ஆட்சியா் மனீஷ் ஆய்வு மேற்கொண்டாா்.

Advertisement

Advertisement

ஆய்வின்போது நியாயவிலைக் கடைகளுக்கு அனுப்பப்படும் அரிசி, சா்க்கரை, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட உணவுப் பொருள்கள், கிடங்குகளில் உள்ள உணவுப் பொருள்களின் இருப்பு மற்றும் பதிவேடுகள், கொள்முதல் செய்யப்படும் உணவுப்பொருள்களை பரிசோதனை மேற்கொள்ளும் முறைகள், மழை மற்றும் ஈரப்பதத்தால் உணவுப் பொருள்கள் வீணாகாமல் தடுக்கும் முறைகள் உள்ளிட்டவை குறித்து மாவட்ட ஆட்சியா் மனீஷ் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த ஆய்வின்போது தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் மகாராஜ், பல்லடம் கிடங்கு பொறுப்பாளா் முத்துவேல் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments