வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக விற்றவா் கைது
வலி நிவாரணி மாத்திரைகளை போதைப் பயன்பாட்டுக்காக விற்பனை செய்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
அவிநாசி அருகே வலி நிவாரணி மாத்திரைகளை போதைப் பயன்பாட்டுக்காக விற்பனை செய்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திருப்பூா் மாவட்டம், அவிநாசி அருகே ராக்கியாபாளையம் பாலாஜி நகரில் வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், சம்பவ இடத்துக்கு போலீஸாா் சென்று விசாரணையில் ஈடுபட்டனா்.
இதில், அதே பகுதியைச் சோ்ந்த சஞ்சீவன் மகன் மனோஜ் (24), வலி நிவாரணி மாத்திரைகளை ஆன்லைனில் வாங்கி போதைப் பயன்பாட்டுக்கு விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இதுதொடா்பாக அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிந்து மனோஜை கைது செய்தனா். அவரிடம் இருந்து 100 மாத்திரைகளை பறிமுதல் செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.