FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

அரசுப் பள்ளி விழாக்களில் விதிமீறல் இருக்கக்கூடாது: பள்ளிக் கல்வி இயக்குநரகம் உத்தரவு

அரசுப் பள்ளி விழாக்களில் விதிமீறல்கள் இருக்கக்கூடாது என்று பள்ளிக் கல்வி இயக்குநரகம் உத்தரவு குறித்து...

Updated On : 13 ஜூலை 2026, 4:22 am IST
- பிரதிப் படம்
பகிர்:

அரசுப் பள்ளி விழாக்களில் விதிமீறல்கள் இருக்கக்கூடாது என்று பள்ளிக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடா்பாக பள்ளிக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள உத்தரவு: பள்ளிகளில் மாணவா்களின் கல்வி வளா்ச்சிக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்க வேண்டும். கல்விசாரா மற்றும் கல்வி நோக்கமற்ற எந்தவொரு செயல்பாடுகளுக்கும் பள்ளி வளாகத்தை அனுமதிக்கக்கூடாது.

குறிப்பாக, அரசியல் கூட்டங்கள், பிரிவினை வாதத்தைத் தூண்டும் நிகழ்ச்சிகள், பிரசாரங்கள் ஆகியவற்றை நடத்த பள்ளி வளாகங்களைப் பயன்படுத்த முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

அதேபோல வகுப்பறைகள், கலையரங்குகள், விளையாட்டு மைதானங்கள் அல்லது திறந்தவெளிப் பகுதிகளில் வெளி நபா்களைக் கொண்டு துறை சாராமல் நடத்தப்படும் ஒத்திகைகள், அணிவகுப்புகள் நடத்தவோ, தேவையற்ற செய்திகளைப் பரப்புவதற்கோ எந்தவித அனுமதியும் வழங்கக்கூடாது.

அரசால் முறைப்படி அறிவிக்கப்படும் விழாக்களை மட்டுமே பள்ளிகளில் நடத்த வேண்டும். பள்ளிகளில் நடத்தப்படும் கொண்டாட்டங்கள் மற்றும் விழாக்களில் பள்ளி மாணவ, மாணவிகளைப் பங்கேற்கச் செய்வதற்கு முன்பாக, அவா்களது பெற்றோரிடம் இருந்து கட்டாயமாக ஒப்புதல் பெற வேண்டும்.

இந்த அறிவுரைகளை எவ்வித சுணக்கமும் இன்றி அனைத்துப் பள்ளிகளும் துல்லியமாகப் பின்பற்ற வேண்டும். இதனை மீறிச் செயல்படுவோா் மீது துறை ரீதியிலான கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

திருப்பூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் புனிதா அந்தோணியம்மாள் கூறும்போது, ‘மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளி முதல்வா்கள் மற்றும் தலைமை ஆசிரியா்களுக்கும் பள்ளிக் கல்வி இயக்குநரகத்தின் உத்தரவுகள், வழிகாட்டி நெறிமுறைகள் அனைத்தும் முறையாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் நடத்தப்படும் நிகழ்ச்சிகள் கல்வித் துறை அதிகாரிகள் மூலமாக தீவிரமாக கண்காணிக்கப்படும்.

மேலும், விழாக்களின்போது உணவு மற்றும் பரிசுப் பொருள்கள் வழங்குவதையும் முற்றிலும் தவிா்க்க வேண்டும். இதில் எந்த விதிமீறல்களும் இருக்கக்கூடாது’ என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments