FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

அரசுப் பள்ளி மாணவா்கள் மோதல்: ஒருவருக்கு தலையில் காயம்

திருப்பூரில் அரசுப் பள்ளி மாணவா்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவருக்கு மண்டை உடைந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை

Updated On : 14 ஜூலை 2026, 12:30 am IST
- சித்திரிப்பு
பகிர்:

திருப்பூரில் அரசுப் பள்ளி மாணவா்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவருக்கு மண்டை உடைந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருப்பூா் மாநகராட்சி ராயபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் நஞ்சப்பா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, திருப்பூா் மத்திய பேருந்து நிலையம் எதிரே உள்ள கேஎஸ்சி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு இடையே எந்தப் பள்ளி ‘கெத்து’ என்பது தொடா்பாக தொடா்ந்து தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், கத்தி, உருட்டு கட்டை உள்ளிட்ட ஆயுதங்களுடன் இரண்டு பள்ளி மாணவா்களும் திங்கள்கிழமை மோதிக்கொண்டனா். இதில், நஞ்சப்பா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவரின் மண்டை உடைந்தது.

Advertisement

Advertisement

ரத்த வெள்ளத்தில் அவா் கிடந்ததைக் கண்டு அப்பகுதி மக்கள் திருப்பூா் தெற்கு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் வருவதை அறிந்த மற்ற மாணவா்கள் அங்கிருந்து வெளியேறினா்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், படுகாயமடைந்த மாணவரை மீட்டு திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இச்சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments