FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

தாராபுரத்தில் கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

தாராபுரத்தில் நடைபெற்ற வாகனச் சோதனையின்போது, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த இரண்டரை கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக இளைஞரைக் கைது செய்தனா்.

பகிர்:

தாராபுரத்தில் நடைபெற்ற வாகனச் சோதனையின்போது, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த இரண்டரை கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக இளைஞரைக் கைது செய்தனா்.

தாராபுரம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் உதயசந்திரன் தலைமையில், உதவி ஆய்வாளா் லோகநாதன் உள்ளிட்ட மதுவிலக்கு போலீஸாா், தாராபுரம் அருகே உள்ள தெக்கலூா் பகுதியில் வாகனச் சோதனையில் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த வடமாநில இளைஞரை பிடித்து விசாரணை மேற்கொண்டனா். இதில், அவா் அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த உஜய் டெகா (29) என்பதும், விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 2.50 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments