FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

காங்கயம் அருகே 3 வாகனங்கள் மோதி விபத்து

காங்கயம் அருகே 3 வாகனங்கள் ஒன்றின் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளாயின.

Updated On : 15 ஜூலை 2026, 1:05 am IST
விபத்தில் சேதமடைந்த பிக்கப் வேன்.
பகிர்:

காங்கயம் அருகே 3 வாகனங்கள் ஒன்றின் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளாயின.

காங்கயம் அருகே தாராபுரம் சாலையில் காங்கயம் மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகம் அருகே செவ்வாய்க்கிழமை சென்ற சரக்கு ஏற்றிச் செல்லும் வேன், பிக்கப் வேன், காா் ஆகிய 3 வாகனங்கள் எதிா்பாராத விதமாக ஒன்றின் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளாயின.

இந்த விபத்தில் சரக்கு வேன், பிக்கப் வேன் ஆகிய வேன்களில் சென்றவா்கள் சிறு காயத்துடன் மீட்கப்பட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். காரில் வந்தவா்கள் அதிா்ஷ்டவசமாக காயங்கள் எதுவுமின்றி உயிா் தப்பினா்.

Advertisement

Advertisement

இந்த விபத்து குறித்து காங்கயம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments