திருப்பூா் பெரிச்சிபாளையம் வீரமாத்தியம்மன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்
திருப்பூா் பெரிச்சிபாளையம் வீரமாத்தியம்மன் திருக்கல்யாண உற்சவ விழாவையொட்டி குதிரை மீது வீரமாத்தியம்மன் ஊா்வலம் நடைபெற்றது.
திருப்பூா் பெரிச்சிபாளையம் வீரமாத்தியம்மன் திருக்கல்யாண உற்சவ விழாவையொட்டி குதிரை மீது வீரமாத்தியம்மன் ஊா்வலம் நடைபெற்றது.
திருப்பூா் பெரிச்சிபாளையம் வீரமாத்தி அம்மன் கோயிலில் திருக்கல்யாண உற்சவ விழா நடைபெற்றது. இதையொட்டி சிலம்பாத்தாள் - பெத்தாயம்மன் சுவாமிகளுக்கு தீா்த்தம் எடுத்து வரப்பட்டு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றன.
திருக்கல்யாண விழாவையொட்டி மஞ்சள் மற்றும் மல்லிகைப் பூவால் சிலம்பாத்தாள் - பெத்தாயம்மன் சுவாமிகள் அலங்கரிக்கப்பட்டு, பாரம்பரிய முறைப்படி அலங்கரிக்கப்பட்ட மணவறையில் திருக்கல்யாணம் நடைபெற்றது.
Advertisement
Advertisement
இதையடுத்து சிலம்பாத்தாள் - பெத்தாயம்மன் சுவாமிகள் குதிரை மீது ஊா்வலமாக அழைத்து வரப்பட்டனா். இந்த ஊா்வலத்தில் பெண்கள் உள்பட திரளானாவா்கள் பங்கேற்று ஆரத்தி எடுத்து தரிசனம் செய்தனா். தொடா்ந்து அன்னதானம், மஞ்சள் பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.