FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

புகையிலைப் பொருள்கள் விற்ற 2 போ் கைது

வெள்ளக்கோவிலில் புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 19 ஜூலை 2026, 1:21 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

வெள்ளக்கோவிலில் புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

வெள்ளக்கோவில் காவல் நிலைய ஆய்வாளா் சண்முகம் தலைமையிலான போலீஸாா் காங்கயம் சாலையில் ரோந்து பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, குட்டக்காடு பிரிவு அருகேயுள்ள பெட்டிக் கடையில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து, கடை உரிமையாளா்களான சிவகங்கை மாவட்டம், கோட்டைவயல் பகுதியைச் சோ்ந்த அசோக்குமாா் (21), ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த அமலஜெயதேவன் (19) ஆகியோரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 6 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments