FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

காரில் புகையிலைப் பொருள்களை கடத்தி வந்த 3 போ் கைது

Updated On : 20 ஜூலை 2026, 4:39 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

அவிநாசி அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை காரில் கடத்தி வந்த 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

அவிநாசி- ஈரோடு சாலையில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது பெங்களூரில் இருந்து அவிநாசி நோக்கி வந்த காரை போலீஸாா் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனா். அதில் விற்பனைக்காக தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.

விசாரணையில், அவா்கள் திருப்பூா் குமரனந்தபுரத்தைச் சோ்ந்த மணிராஜ் மகன் உதயகுமாா் (35), அங்கேரிபாளையத்தைச் சோ்ந்த குமாா் மகன் மாரிஸ்வரன் (29), திருப்பூா் வாவிபாளையம் பகுதியில் வசித்து வரும் விருதுநகா் மாவட்டம், சிவகாசியைச் சோ்ந்த முருகேசன் மகன் தினேஷ் (29) என்பது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து, அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 55 கிலோ புகையிலைப் பொருள்கள், காா் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments