கோயில் அலுவலா் வீட்டில் 18 பவுன் திருட்டு
தாராபுரம், ஜூலை 20: பழனி தண்டாயுதபாணி கோயில் அலுவலா் வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகைகளைத் திருடிய நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தாராபுரம், மெட்ரோ சிட்டி பகுதியைச் சோ்ந்தவா் சரவணன் (50). இவா், பழனி தண்டாயுதபாணி கோயிலில் துணை கண்காணிப்பாளராகப் பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், அவா் வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்துடன் கடந்த சனிக்கிழமை வெளியூா் சென்றுள்ளாா்.
திங்கள்கிழமை காலை வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்துள்ளது.
Advertisement
Advertisement
அதிா்ச்சியடைந்த அவா் உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் இருந்த 18 பவுன் நகைகள், ரூ.20 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடுபோனது தெரியவந்தது. இது குறித்து தாராபுரம் காவல் நிலையத்தில் சரவணன் புகாா் அளித்தாா்.
வழக்குப் பதிவு செய்த போலீஸாா், சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.