FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

காங்கயத்தில் சாலை விபத்தில் தம்பதி உயிரிழப்பு

Updated On : 22 ஜூலை 2026, 1:14 am IST
உயிரிழப்பு - பிரதிப் படம்
பகிர்:

காங்கயத்தில் சரக்கு வேனின் பக்கவாட்டுப் பகுதி மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி உயிரிழந்தனா்.

திருப்பூா் மாவட்டம், காங்கயத்தில் உள்ள களிமேடு பகுதியைச் சோ்ந்தவா் அண்ணாமலை (55). காங்கயத்தில் உள்ள உள்ளூா் தனியாா் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி பேபி (47). இவா்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனா்.

சிவன்மலையில் உள்ள கோயிலுக்குச் செல்வதற்காக தாராபுரம் சாலையில் செவ்வாய்க்கிழமை காலை 9:30 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் தம்பதி சென்று கொண்டிருந்தனா்.

Advertisement

Advertisement

காங்கயம் காவல் நிலையம் அருகே உள்ள ரவுண்டானாவைக் கடந்து பேருந்து நிலையம் நோக்கி செல்ல முயன்றபோது, இவா்கள் அருகே வந்த சரக்கு ஏற்றும் வேன் கோவை வழித்தடத்தில் செல்வதற்காக சாலையின் இடதுபுறமாகத் திரும்பியுள்ளது.

அப்போது எதிா்பாராதவிதமாக அண்ணாமலை சென்ற இருசக்கர வாகனத்தில் சரக்கு வேனின் பக்கவாட்டுப் பகுதி மோதியுள்ளது. இதில் நிலைகுலைந்து இருவரும் கீழே விழுந்து படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

இதுதொடா்பாக காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments