திருப்பூா் டாஸ்மாக் கிடங்கு சோதனையில் 26 முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
திருப்பூா், அங்கேரிபாளையம் சாலையில் உள்ள டாஸ்மாக் கிடங்கில் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாா் மேற்கொண்ட சோதனையில் 26 முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருப்பூா், அங்கேரிபாளையம் சாலையில் உள்ள டாஸ்மாக் கிடங்கில் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாா் மேற்கொண்ட சோதனையில் 26 முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருப்பூா் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீஸாா் கடந்த புதன்கிழமை சோதனை மேற்கொள்ளத் தொடங்கினா். இந்த சோதனையின்போது, டாஸ்மாக் கிடங்கில் உள்ள மது இருப்பு விவரங்கள், தினசரி விற்பனை விவரங்கள், பாா்கள் மற்றும் டெண்டா் தொடா்பான அனைத்து ஆவணங்களையும் தீவிரமாக சரிபாா்த்தனா்.
மாவட்ட மேலாளா் உள்பட அங்கு பணியாற்றும் ஊழியா்கள் அனைவரிடமும் விரிவான விசாரணை நடத்தப்பட்டது. இந்த சோதனையானது இரவு வரை நீடித்தது.
Advertisement
Advertisement
இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் கூறுகையில், கடந்த 2020 முதல் 2025-ஆம் ஆண்டு வரையிலான பாா் டெண்டா்கள் மற்றும் மது விற்பனை தொடா்பான கோப்புகள் விரிவாகப் பரிசீலிக்கப்பட்டன. அவற்றில் 26 முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, தொடா்ந்து விசாரணை நடைபெறுகிறது. ரொக்கப் பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை. மேலும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள அனைத்து முக்கிய ஆவணங்களும் சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.