FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

வெள்ளக்கோவிலில் ரூ.29 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.29 லட்சத்துக்கு கொப்பரை (தேங்காய்ப் பருப்பு) விற்பனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 3 ஜூன் 2026, 2:27 am IST
உலா்களத்தில் காயவைக்கப்பட்டுள்ள கொப்பரை.
பகிர்:

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.29 லட்சத்துக்கு கொப்பரை (தேங்காய்ப் பருப்பு) விற்பனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விளாத்திகுளம், ஆண்டிப்பட்டிகோட்டை, மாா்க்கம்பட்டி, கீரனூா், பழையகோட்டை, மங்கலப்பட்டி உள்ளிட்ட இடங்களில் இருந்து 67 விவசாயிகள் 480 மூட்டைகளில் 24 டன் கொப்பரைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

காங்கயம், வெள்ளக்கோவில், சிவகிரி, முத்தூா் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 10 வணிகா்கள் இவற்றை வாங்குவதற்காக வந்திருந்தனா். கொப்பரை கிலோ ரூ.90.99 முதல் ரூ.133.33 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.125.09. கடந்த வார சராசரி விலை ரூ.126.89.

Advertisement

Advertisement

ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.29 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக, திருப்பூா் விற்பனைக்குழு முதுநிலை செயலாளா் எஸ்.சண்முகசுந்தரம் தெரிவித்தாா். ஏல ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் மகுடீஸ்வரன் செய்திருந்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments