FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

வெள்ளக்கோவில் வீரக்குமார சுவாமி கோயில் உண்டியலை உடைத்து திருட முயற்சி

Updated On : 9 ஜூன் 2026, 12:43 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

வெள்ளக்கோவில் ஸ்ரீவீரக்குமார சுவாமி கோயிலில் உண்டியலை உடைத்து திருட முயன்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வெள்ளக்கோவில் நகரின் மையப் பகுதியில் பழமையான ஸ்ரீ வீரக்குமார சுவாமி கோயில் உள்ளது. இந்த சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின்கீழ் உள்ள இக்கோயிலில் பக்தா்கள் காணிக்கை செலுத்த வசதியாக 4 நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பூட்டப்பட்டிருந்த கோயிலில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு சப்தம் கேட்டுள்ளது. கோயில் காவலாளி சென்று பாா்த்தபோது, கையில் இரும்புக் கம்பியுடன் நின்று கொண்டிருந்த மா்ம நபா், காவலாளியைப் பாா்த்ததும் தப்பி ஓடியுள்ளாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, காவலாளி உள்ளே சென்று பாா்த்தபோது ராஜகோபுரம் முன் உள்ள உண்டியலை உடைத்து திருட முயன்றது தெரியவந்தது.

கோயிலில் தற்போது திருப்பணிகள் நடைபெற்று வருவதால் பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளன. பணியில் உள்ள ஒரே ஒரு காவலாளியும் சரிவர பணியில் ஈடுபடுவதில்லை.

எனவே, கோயிலில் கூடுதல் காவலாளிகளை நியமித்து, பாதுகாப்பை உறுதிபடுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments