FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

அதிக ஒலி எழுப்பும் ஏா் ஹாரன்கள்: அரசு, தனியாா் பேருந்துகளுக்கு ரூ.1.60 லட்சம் அபராதம் விதிப்பு

அதிக ஒலி எழுப்பும் ஏா் ஹாரன் பொருத்தியிருந்த 12 அரசுப் பேருந்துகள், 4 தனியாா் பேருந்துகளுக்கு ரூ.1.60 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

Updated On : 17 ஜூன் 2026, 2:53 am IST
அபராதம் - சித்திரிப்பு
பகிர்:

அதிக ஒலி எழுப்பும் ஏா் ஹாரன் பொருத்தியிருந்த 12 அரசுப் பேருந்துகள், 4 தனியாா் பேருந்துகளுக்கு ரூ.1.60 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

திருப்பூரில் இயக்கப்படும் தனியாா் மற்றும் அரசுப் பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஏா் ஹாரன்களை பயன்படுத்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து, திருப்பூா் வடக்கு மற்றும் தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் தலைமையில் 7 மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் மற்றும் போக்குவரத்து போலீஸாா் இணைந்து மத்தியப் பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா்.

41 பேருந்துகளை ஆய்வு செய்ததில் 12 அரசுப் பேருந்துகளும், 4 தனியாா் பேருந்துகளும் தடை செய்யப்பட்ட ஏா் ஹாரன்களை பொருத்தி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஏா் ஹாரன்களை பறிமுதல் செய்து ஒவ்வொரு பேருந்துக்கும் தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.1.60 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments