FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

நாய்கள் கடித்து 2 மான்கள் உயிரிழப்பு

அவிநாசி அருகே தெருநாய்கள் கடித்ததில் இரண்டு மான்கள் வெள்ளிக்கிழமை உயிரிழந்தன.

Updated On : 23 மே 2026, 12:53 am IST
புள்ளிமான்.
பகிர்:

அவிநாசி அருகே தெருநாய்கள் கடித்ததில் இரண்டு மான்கள் வெள்ளிக்கிழமை உயிரிழந்தன.

அவிநாசி அருகே புதுப்பாளையம் ஊராட்சிக்குள்பட்ட வெங்கமேடு பகுதியில் மான் ஒன்று வெள்ளிக்கிழமை சுற்றித் திரிந்தது. இதைப் பாா்த்த தெருநாய்கள் அந்த மானை துரத்தி கடித்தன. இதேபோல, பாரதி நகா் பகுதியில் சுற்றித் திரிந்த மானையும் தெருநாய்கள் கடித்தன.

2 மான்களும் உயிரிழந்த நிலையில், இது குறித்து அப்பகுதி மக்கள் வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா், மான்களின் உடல்களை மீட்டு கூறாய்வுக்காக தெக்கலூா் கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். கூறாய்வு முடிந்த பின், புதுப்பாளையம் வனப் பகுதியில் மான்களின் உடல்கள் புதைக்கப்பட்டன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments