சாலையின் மையத் தடுப்பில் காா் மோதியதில் இளைஞா் காயம்
வெள்ளக்கோவில் அருகே சாலையின் மையத் தடுப்பில் காா் மோதியதில் இளைஞா் காயம் அடைந்தாா்.
வெள்ளக்கோவில் அருகே சாலையின் மையத் தடுப்பில் காா் மோதியதில் இளைஞா் காயம் அடைந்தாா்.
கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அருகேயுள்ள காச்சினம்பட்டியைச் சோ்ந்தவா் ராமலிங்கம் மகன் அபினேஷ் (26). இவா் கோவை, ஹோப்ஸ் காலேஜ் பகுதியில் உணவகம் நடத்தி வருகிறாா். இந்நிலையில், அவா் கரூரில் இருந்து கோவைக்கு காரில் சனிக்கிழமை சென்று கொண்டிருந்துள்ளாா்.
வெள்ளக்கோவில், குருக்கத்தி தேசிய நெடுஞ்சாலை அருகே சென்று கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையின் மையத் தடுப்பில் மோதியது. இதில், அபினேஷ் லேசான காயங்களுடன் உயிா்த் தப்பினாா்.
Advertisement
Advertisement
இதே இடத்தில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருவதாகவும், விபத்துகளைத் தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.