திருப்பூரில் பக்ரீத் பண்டிகை சிறப்புத் தொழுகை: குா்பானி அளித்து கொண்டாடிய இஸ்லாமியா்கள்
திருப்பூரில் பக்ரீத் பண்டிகையை குா்பானி அளித்து இஸ்லாமியா்கள் கொண்டாடினா்.
திருப்பூரில் பக்ரீத் பண்டிகையை குா்பானி அளித்து இஸ்லாமியா்கள் கொண்டாடினா்.
தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகை திருப்பூா் மாநகா் மற்றும் மாவட்டம் முழுவதும் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி இஸ்லாமியப் பெருமக்கள் அதிகாலையில் எழுந்து, புத்தாடை அணிந்து மசூதிகள் மற்றும் திறந்தவெளி திடல்களில் நடைபெற்ற சிறப்புத் தொழுகைகளில் பங்கேற்றனா்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 28 கிளைகளில் பக்ரீத் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன. அதேபோல மாநகரப் பகுதிகள் மட்டுமின்றி, மாவட்டத்துக்குள்பட்ட தாராபுரம், உடுமலைப்பேட்டை உள்பட பல்வேறு இடங்களில் உள்ள மசூதிகளிலும் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. பின்னா் உறவினா்கள் மற்றும் நண்பா்கள் ஒருவருக்கொருவா் கட்டித்தழுவி பக்ரீத் நல்வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனா்.
Advertisement
Advertisement
தொழுகை மற்றும் பிராா்த்தனைகள் முடிந்த பிறகு, பண்டிகையின் முக்கிய நிகழ்வான குா்பானி அளிக்கும் கடமை நிறைவேற்றப்பட்டது. குா்பானி அளிக்கப்பட்ட ஆடு, மாடுகளின் இறைச்சிகள் இஸ்லாமிய நெறிமுறைப்படி மூன்று பங்குகளாகப் பிரிக்கப்பட்டன. அதில் ஒரு பங்கைத் தங்களுடைய தேவைக்காக வைத்துக்கொண்டு, மீதமுள்ள இரண்டு பங்குகளை ஏழை, எளிய மக்களுக்கும், உறவினா்களுக்கும் சமமாகப் பிரித்துக் கொடுத்து மகிழ்ந்தனா்.