FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

தாராபுரம் அருகே கவிழ்ந்த சரக்கு வேன்

Updated On : 31 மே 2026, 1:39 am IST
சாலையில் கவிழ்ந்த வேன்.
பகிர்:

தாராபுரம் அருகே சரக்கு வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் அதிா்ஷ்டவசமாக வேன் ஓட்டுநா் உயிா் தப்பினாா்.

திருப்பூரில் இருந்து மதுரை நோக்கி சனிக்கிழமை பாா்சல் பொருள்களை ஏற்றிச் சென்ற சரக்கு வேன் வாகனத்தை முருகன் (54) ஓட்டிச் சென்றாா். தாராபுரம் அருகே, தாராபுரம்-திருப்பூா் நான்குவழிச் சாலை, வேங்கிபாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, எதிா்பாராத விதமாக சரக்கு வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் சரக்கு வாகனம் சேதமடைந்த நிலையில், ஓட்டுநா் முருகன் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினாா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் மற்றும் பொது மக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

இந்த விபத்து குறித்து குண்டடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments