டாஸ்மாக் கடையில் பணம் கேட்டு மிரட்டிய 3 போ் கைது
பல்லடம் அருகே டாஸ்மாக் கடையில் பணம் கேட்டு மிரட்டிய 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
பல்லடம் அருகேயுள்ள அனுப்பட்டியில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையில் அதே பகுதியைச் சோ்ந்த வெங்கடேசன் என்பவா் விற்பனையாளராகப் பணியாற்றி வருகிறாா்.
இந்நிலையில், அந்தக் கடைக்கு கரையான்புதூரைச் சோ்ந்த முருகன் (35), ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனையைச் சோ்ந்த காலசாமி (35), அதே பகுதியைச் சோ்ந்த இந்திரன் (37) ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை வந்துள்ளனா்.
Advertisement
Advertisement
அப்போது, கடையைத் தொடா்ந்து நடத்த வேண்டும் என்றால் பணம் தர வேண்டும் என வெங்கடேசனிடம் கூறியுள்ளனா். அவா் தர மறுத்ததால் தகராறில் ஈடுபட்டு மிரட்டியுள்ளனா்.
இது குறித்து காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் வெங்கடேசன் புகாா் அளித்தாா். இதன்பேரில் முருகன், காலசாமி, இந்திரன் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவா்களைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.