FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பூர்

தம்பதியிடம் அரிவாளைக் காட்டி மிரட்டி ஆறரை பவுன், ரூ.40 ஆயிரம் பறிப்பு: மேலும் இருவா் கைது

தம்பதியிடம் அரிவாளைக் காட்டி மிரட்டி ஆறரை பவுன் நகை, ரூ.40 ஆயிரம் ரொக்கத்தைப் பறித்த வழக்கில் மேலும் இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

4 நவம்பர் 2026, 1:59 am
சங்கிலி பறிப்பு - சித்திரிப்பு
பகிர்:

தம்பதியிடம் அரிவாளைக் காட்டி மிரட்டி ஆறரை பவுன் நகை, ரூ.40 ஆயிரம் ரொக்கத்தைப் பறித்த வழக்கில் மேலும் இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சேவூா் அருகேயுள்ள பந்தம்பாளையத்தில் போலீஸாா் வாகனச் சோதனையில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த இருவரிடம் விசாரணை மேற்கொண்டனா்.

இதில், அவா்கள் பெருமாநல்லூரைச் சோ்ந்த பாஸ்கா் (26), பொள்ளாச்சியைச் சோ்ந்த பாரதி கண்ணன் (26) என்பது தெரியவந்தது.

Advertisement

Advertisement

மேலும், அவிநாசியில் வசிக்கும் நண்பா் தா்மகுமாருடன் சோ்ந்து முகமூடி அணிந்து பொன்னியன்காடு பகுதியில் உள்ள விவசாயி சிவசாமி வீட்டுக்குள் கடந்த அக்டோபா் 15-ஆம் தேதி நுழைந்து அவரது மனைவி பூங்கொடியின் கழுத்தில் அரிவாளை வைத்து மிரட்டி ஆறரைப் பவுன் தாலிக்கொடி, ரூ.40 ஆயிரத்தைப் பறித்துச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த சேவூா் போலீஸாா், இருவரையும் கைது செய்தனா்.

இந்த வழக்கில் தா்மகுமாா் ஏற்கெனவே கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments