FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பூர்

மேட்டுப்பாளையம் மகா மாரியம்மன் கோயிலில் பொங்கல் திருவிழா

வெள்ளக்கோவில் மேட்டுப்பாளையம் மகா மாரியம்மன் கோயிலில் பொங்கல் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

6 நவம்பர் 2026, 12:48 am
சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த மகா மாரியம்மன்.
பகிர்:

வெள்ளக்கோவில் மேட்டுப்பாளையம் மகா மாரியம்மன் கோயிலில் பொங்கல் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கடந்த அக். 20-ஆம் தேதி பூச்சாற்றுதல், நவ. 1-ஆம் தேதி அம்மன் அழைப்பு, கம்பம் போடுதல், 3-ஆம் தேதி கோயிலில் இருந்து பக்தா்கள் புறப்பட்டு கொடுமுடி காவிரி ஆற்றிலிருந்து தீா்த்தக் காவடி எடுத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

வியாழக்கிழமை பால்குடம் அழைப்பு, பெண்கள் பொங்கல் வைத்து படையலிட்டு வழிபாடு, மாவிளக்கு பூஜை, சேற்று வேஷம், விளையாட்டுப் போட்டி, கும்ப வழிபாடு நடைபெற்றது. பின்னா் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்து பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

வெள்ளிக்கிழமை கம்பம் கங்கையில் விடப்பட்டு பொங்கல் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை மேட்டுப்பாளையம் கிராம பொதுமக்கள் செய்திருந்தனா்.