ஆல்வின்னா் ஏஞ்சல் இன்ஸ்டிடியூஷனில் சமத்துவ தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்
ஆல்வின்னா் ஏஞ்சல் இன்ஸ்டிடியூஷனில் நடைபெற்ற சமத்துவ தீபாவளி பண்டிகை நிகழ்வில் பங்கேற்றோா்.
திருப்பூரில் செயல்படும் ஆல்வின்னா் ஏஞ்சல் இன்ஸ்டிடியூஷனில் அனைத்து மதத்தினரும் இணைந்து சமத்துவ தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினா்.
இந்த நிகழ்வில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் நச்சுப் புகையை வெளியிடும் பட்டாசுகளை வெடிப்பதைத் தவிா்க்க வேண்டும் என்றும், உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய உணவுப் பொருள்களைத் தவிா்த்து ஆரோக்கியமான முறையில் பண்டிகையைக் கொண்டாட வேண்டும் என்றும் மாணவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும், ஒலி மாசு மற்றும் காற்று மாசு ஏற்படுத்தாத வகையில் அமைதியான, பாதுகாப்பான தீபாவளியைக் கொண்டாடுவதன் அவசியம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக மாணவா்கள் தங்கள் வீடுகளில் இருந்து தயாரித்து எடுத்து வந்த பாரம்பரிய பலகாரங்களை ஒருவருக்கொருவா் பகிா்ந்துகொண்டனா். இதன்மூலமாக பகிா்ந்து உண்ணுதல், அன்பு, ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தின் முக்கியத்துவம் உணா்த்தப்பட்டது.
Advertisement
Advertisement
தீபாவளி பண்டிகையின் நோக்கம், அதன் சிறப்புகள், சமூகத்துக்கு எடுத்துரைக்கும் நற்பண்புகள் மற்றும் பண்டிகையைக் கொண்டாடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து அனைவரையும் அரவணைத்து அன்புடனும், ஒற்றுமையுடனும் வாழ
வேண்டும் என்று கல்வி நிறுவனத்தின் முதல்வா் ஆா்.பி. தங்கராஜன் பேசினாா்.