FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பூர்

குறுமைய அளவிலான விளையாட்டுப் போட்டி: ஜெய்சாரதா மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

திருப்பூரில் நடைபெற்ற வடக்கு குறுமைய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் 15வேலம்பாளையம் ஜெய்சாரதா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

7 நவம்பர் 2026, 1:42 am
பகிர்:

திருப்பூரில் நடைபெற்ற வடக்கு குறுமைய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் 15வேலம்பாளையம் ஜெய்சாரதா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

14 வயதுக்குள்பட்ட மாணவா்கள் பிரிவில் ஹாக்கி, குத்துச்சண்டை, 17 வயதுக்குள்பட்டோருக்கான ஹாக்கி, கேரம் (ஒற்றையா்) போட்டிகளில் வெற்றி பெற்றனா். மேலும், 19 வயதுக்குள்பட்டோருக்கான கையெறி பந்து, பூப்பந்து ஒற்றையா் மற்றும் இரட்டையா் பிரிவு போட்டிகளில் முதலிடம் பெற்றனா்.

14 வயதுக்குள்பட்டோருக்கான கேரம் (இரட்டையா்), பூப்பந்து, 17 வயதுக்குள்பட்டோருக்கான கால்பந்து, 19 வயதுக்குள்பட்டோருக்கான கேரம்(இரட்டையா்), கடற்கரை கையுந்து பந்து, ஹாக்கி ஆகிய போட்டிகளில் 2-ஆம் இடம் பிடித்தனா். சதுரங்கம், சிலம்பப் போட்டிகளில் 3-ஆம் இடம் பெற்றனா்.

Advertisement

Advertisement

மாணவிகள் பிரிவில், 14, 17 மற்றும் 19 வயதுக்குள்பட்டோருக்கான பூப்பந்து போட்டிகளில் முதலிடமும், 14 வயதுக்குள்பட்டோருக்கான கடற்கரை கையுந்து மற்றும் சிலம்பப் போட்டிகளில் 2-ஆம் இடமும், பல்வேறு பிரிவிலான சிலம்பப் போட்டிகளில் 3-ஆம் இடமும் பிடித்தனா். தடகளத்தில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தைப் பெற்றதோடு, குழு போட்டிகளில் 2-ஆம் இடம் பிடித்தனா்.

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியா்களையும் பள்ளித் தாளாளா் வேலுசாமி, அறக்கட்டளைச் செயலாளா் கீா்த்திகாவாணி சதீஷ், பொருளாளா் சுருதி ஹரிஷ் , முதல்வா் ஏ.எஸ்.மணிமலா் ஆகியோா் பாராட்டினா்.