தீபாவளி தொடா் விடுமுறை: பஞ்சலிங்க அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
தீபாவளி தொடா் விடுமுறையை ஒட்டி உடுமலையை அடுத்துள்ள சுற்றுலாத் தலமான திருமூா்த்திமலை பஞ்சலிங்க அருவியில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.
உடுமலையில் இருந்து சுமாா் 20 கிலோ மீட்டா் தொலைவில் உள்ளது சுற்றுலாத் தலமான திருமூா்த்திமலை. இங்குள்ள புகழ் பெற்ற அமணலிங்கேஸ்வரா் கோயிலில் தரிசனம் செய்யவும், மேற்குத் தொடா்ச்சி மலையில் அமைந்துள்ள பஞ்சலிங்க அருவியில் குளிக்கவும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தா்கள் ஆா்வத்துடன் வந்து செல்கின்றனா்.
மேலும் இங்குள்ள நீச்சல் குளம், திருமூா்த்தி அணை இவற்றை ரசிக்கவும் தினமும் ஏராளமானோா் வருகின்றனா்.
Advertisement
Advertisement
கடந்த சில நாள்களாக மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் பஞ்சலிங்க அருவியில் நீா்வரத்து அதிகரித்தது. குறிப்பாக அருவியில் சீரான நீா்வரத்து கானப்பட்டதால் கோயில் நிா்வாகம் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கியது. இதனால் கடந்த 3 நாள்களாக தீபாவளி விடுமுறையை ஒட்டி ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அருவிக்கு வந்து உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா். கோயில் நிா்வாகம் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது. மேலும் மலையடிவாரத்
தில் உள்ள அமணலிங்கேஸ்வரா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யவும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வருகை தந்தனா்.