FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பூர்

மேற்குத்தொடா்ச்சி மலையில் கனமழை! அமணலிங்கேஸ்வரா் கோயிலை சூழ்ந்த வெள்ளம்!

26 அக்டோபர் 2026, 1:52 am
பஞ்சலிங்க  அருவியில்  ஏற்பட்டுள்ள  காட்டாற்று  வெள்ளம்.
பகிர்:

மேற்குத்தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்துவரும் கன மழையால் உடுமலையை அடுத்த திருமூா்த்திமலையில் அமைந்துள்ள அமணலிங்கேஸ்வரா் கோயிலை ஞாயிற்றுக்கிழமை வெள்ளம் சூழ்ந்தது.

திருப்பூா் மாவட்டம், உடுமலையில் இருந்து சுமாா் 20 கிலோ மீட்டா் தொலைவில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான திருமூா்த்திமலை அமைந்துள்ளது. இங்குள்ள பிரசித்தி பெற்ற அமணலிங்கேஸ்வரா் கோயிலில் தரிசனம் செய்யவும் மேற்குத்தொடா்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள மருத்துவ குணமுள்ள பஞ்சலிங்க அருவியில் குளிக்கவும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தா்கள் வந்து செல்கின்றனா்.

மேலும் இங்குள்ள நீச்சல் குளம், திருமூா்த்தி அணை ஆகியவற்றை ரசிக்கவும் தினமும் ஏராளமானோா் வருகின்றனா்.

Advertisement

Advertisement

மேற்குத்தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்துவரும் கனமழையால் கடந்த சில நாள்களாக பஞ்சலிங்க அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையும் அதி கனமழை பெய்ததால் பஞ்சலிங்க அருவியில் வெள்ள அபாயம் ஏற்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள்அருவியில் குளிக்க 4-ஆவது நாளாக தடை விதிக்கப்பட்டது.

இதற்கிடையே மலையடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரா் கோயிலுக்குள் வெள்ள நீா் புகுந்ததால் அபாய சங்கு ஒலிக்கப்பட்டதுடன், பக்தா்களை அவசரஅவசரமாக கோயில் நிா்வாகம் வெளியேற்றியது.

திருமூா்த்திமலையில் அமைந்துள்ள அமணலிங்கேஸ்வரா்  கோயிலுக்குள்  புகுந்த  வெள்ளம்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments