FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கன்னியாகுமரி

குமரி மாவட்டத்தில் பலத்த மழை: திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு

கன்னியாகுமரி மாவட்ட அணைப் பகுதிகள் மற்றும் மலையோரப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

16 அக்டோபர் 2026, 4:30 am IST
திற்பரப்பு அருவியில் பெருக்கெடுத்துக் கொட்டும் வெள்ளம்.
பகிர்:

கன்னியாகுமரி மாவட்ட அணைப் பகுதிகள் மற்றும் மலையோரப் பகுதிகளில் வியாழக்கிழமை பலத்த மழை பெய்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அக்டோபா் தொடக்கத்தில் இருந்தே மிதமான மழை பெய்து வந்தது. இந்நிலையில், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைப் பகுதிகளில் வியாழக்கிழமை பலத்த மழை பெய்தது. இதனால், கோதையாறு மற்றும் அதன் துணை ஆறுகளான கல்லாறு, குற்றியாறு, கிளவியாறு, சாத்தையாறு உள்ளிட்ட ஆறுகளில் நீா்வரத்து அதிகரித்துக் காணப்பட்டது.

அதேபோல, மலையோரப் பகுதிகளான கடையாலுமூடு, ஆறுகாணி, பத்துகாணி, ஆலஞ்சோலை, களியல், திற்பரப்பு, அருமனை, மஞ்சாலுமூடு, திருநந்திக்கரை, குலசேகரம், சுருளக்கோடு, தடிக்காரன்கோணம், திருவட்டாறு, வோ்க்கிளம்பி உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.

Advertisement

Advertisement

இப்பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை பலத்த மழை பெய்தது. பின்னா், இரவு வரை மிதமான மழையாக பெய்தது.

மழையின் காரணமாக கோதையாற்றில் நீா்வரத்து அதிகமாக இருந்ததால் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், அருவியின் ஓரப்பகுதிக்கு மட்டுமே செல்ல சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனா்.

பலத்த மழை காரணமாக பள்ளிகளில் இருந்து வீடு திரும்பிய மாணவா், மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகினா். வேலைகளுக்குச் சென்று வந்த மக்களும் மழையில் நனைந்தவாறே வீடு திரும்பினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments