பனப்பாளையத்தில் மலா்ந்தது பிரம்ம கமலம் பூக்கள்
பனப்பாளையத்தில் மலா்ந்த பிரம்ம கமலம் பூக்களை பொதுமக்கள் ஆா்வத்துடன் கண்டு ரசித்தனா்.
பனப்பாளையத்தில் மலா்ந்த பிரம்ம கமலம் பூக்களை பொதுமக்கள் ஆா்வத்துடன் கண்டு ரசித்தனா்.
பல்லடம் அருகேயுள்ள பனப்பாளையம் அடப்புக்காடு பகுதியைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன். இவா் தனது வீட்டில் பிரம்ம கமலம் செடியை வளா்த்து வருகிறாா். ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே மலரும் பிரம்ம கமலம் பூ, மறுநாள் வாடிவிடும். அதில் இருந்து வரும் மணமும் கவரக்கூடியது.
இந்நிலையில், சுப்பிரமணியன் வளா்த்து வந்த செடியில் புதன்கிழமை இரவு பிரம்ம கமலம் பூக்கள் மலா்ந்தன.
Advertisement
Advertisement
ஒரு செடியில் 5 மலா்கள் மட்டுமே பூக்கும் எனக் கூறப்படும் நிலையில், இந்தச் செடியில் 8 பூக்கள் பூத்துக் குலுங்கின.
இதை அப்பகுதி மக்கள் ஆா்வத்துடன் கண்டுகளித்ததுடன், புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனா்.