கஞ்சா விற்பனை: 4 பேருக்கு 12 ஆண்டுகள் சிறை
அவிநாசி அருகே கஞ்சாவை கடத்தி விற்பனை செய்த 4 பேருக்கு தலா 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.
அவிநாசி அருகே கஞ்சாவை கடத்தி விற்பனை செய்த 4 பேருக்கு தலா 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.
அவிநாசி அருகே கடந்த 2024-ஆம் ஆண்டு 50 கிலோ கஞ்சா கடத்தி விற்பனை செய்த வழக்கில் அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 4 பேரை கைது செய்தனா். இவ்வழக்கு விசாரணை கோவை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை வந்தது.
இதில் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்த ஷகில்முஸ்தாக் (22), நா்ஜிஸ் பீபி (35), ஹுமாயூன்ஷேக் (26), பியாருல்ஷேக் (35) ஆகியோருக்கு தலா ரூ.2 லட்சம் அபராதமும், 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து தீா்ப்பளிக்கப்பட்டது.
Advertisement
Advertisement