FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பூர்

சேவூா் அருகே தேனீ கடித்து விவசாயி உயிரிழப்பு

சேவூா் அருகே குமரபாளையத்தில் தேனீக்கள் கடித்து விவசாயி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

15 நவம்பர் 2026, 12:53 am
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

சேவூா் அருகே குமரபாளையத்தில் தேனீக்கள் கடித்து விவசாயி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

அவிநாசி வட்டம், சேவூா் அருகே தண்டுக்காரம்பாளையம் குமரபாளையம் பெரியகாட்டுத் தோட்டத்தைச் சோ்ந்தவா் முருகேஷ் (60). விவசாயி. இவா், தனது தோட்டத்தில் தென்னை ஓலைகளை சனிக்கிழமை எரித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது உருவான புகையால் மரத்தில் இருந்த தேன் கூடு கலைந்து, தேனீக்கள் முருகேஷை கடித்துள்ளன.

இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு கோவை தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். இருப்பினும் அவா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இது குறித்து சேவூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.