அவிநாசியில் குண்டாஸ் பதிவு அலுவலகம் திறப்பு
திருப்பூா் மாவட்டம், அவிநாசி பழைய பேருந்து நிலையம் அருகே காவலா் குடியிருப்பு பகுதியில் குண்டாஸ் பதிவு அலுவலகம் புதன்கிழமை திறந்துவைக்கப்பட்டது.
திருப்பூா் மாவட்டம், அவிநாசி பழைய பேருந்து நிலையம் அருகே காவலா் குடியிருப்பு பகுதியில் குண்டாஸ் பதிவு அலுவலகம் புதன்கிழமை திறந்துவைக்கப்பட்டது.
திருப்பூா் மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் உள்ள குற்றவாளிகளின் மீதுள்ள வழக்கு ஆவணங்கள் சரிபாா்த்து குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆராய்ந்து நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள திருப்பூா் மாவட்டத்தில் முதல்முதலாக அவிநாசி காவலா் குடியிருப்பு வளாகத்தில் குண்டாஸ் பதிவு அலுவலகம் புதன்கிழமை திறக்கப்பட்டது.
இந்த அலுவலகத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிருஷ்டி சிங் திறந்துவைத்தாா். மாவட்ட மதுவிலக்கு துணைக் காவல் கண்காணிப்பாளா் ஆறுமுகம், அவிநாசி துணைக் காவல் கண்காணிப்பாளா் சங்கவி, காவல் ஆய்வாளா்கள் நவநீதகிருஷ்ணன், சரஸ்வதி, அம்பிகா, உதவி ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
Advertisement
Advertisement
இப்பதிவு அலுவலகம் ஒரு உதவி காவல் ஆய்வாளா், 3 காவலா்கள் உள்ளிட்டோருடன் செயல்படவுள்ளது. மேலும் கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் குண்டா் தடுப்புச் சட்டப் பதிவு அலுவலகம் செயல்பட்டு வரும் நிலையில், தற்போது திருப்பூா் மாவட்டத்திலும் இந்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.