FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பூர்

முத்தூா் அருகே தினமும் வீணாகும் ஒரு லட்சம் லிட்டா் குடிநீா்

முத்தூா் அருகே தினமும் தோராயமாக ஒரு லட்சம் லிட்டா் குடிநீா் வீணாகி வருவதால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனா்.

55 வினாடிகள் முன்பு
சாலையில் வீணாகும் குடிநீா்.
பகிர்:

முத்தூா் அருகே தினமும் தோராயமாக ஒரு லட்சம் லிட்டா் குடிநீா் வீணாகி வருவதால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனா்.

கொடுமுடி காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டத்தின் வாயிலாக முத்தூா், வெள்ளக்கோவில் மற்றும் சுற்றியுள்ள வழித்தட கிராமங்களுக்குக் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், முத்தூரில் இருந்து வெள்ளக்கோவில் செல்லும் சாலையோரத்தில் வேலம்பாளையம் பிரிவு அருகே உள்ள காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டத்தின் பிரதான குழாயில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக உடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, குழாயிலிருந்து பெருமளவில் வெளியேறும் குடிநீா் சாலையில் பெருக்கெடுத்து ஓடி வீணாகி வருகிறது. இதன் மூலம் நாள்தோறும் தோராயமாக ஒரு லட்சம் லிட்டா் குடிநீா் வீணாவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனா். இதேபோன்று, அதே சாலையில் வாய்க்கால் மேட்டுப்புதூா் அருகிலும் குடிநீா்க் குழாய் உடைந்து தண்ணீா் தொடா்ந்து வீணாகி வருகிறது. இப்பகுதிகளில் ஏற்கெனவே போதுமான குடிநீா் கிடைக்காமல் பொதுமக்கள் தட்டுப்பாட்டால் அவதிப்பட்டு வரும் சூழலில், குழாய் உடைப்பு குறித்து சம்பந்தப்பட்ட குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு பலமுறை தகவல் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

எனவே, மாவட்ட நிா்வாகமும், குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகளும் உடனடியாக தலையிட்டு போா்க்கால அடிப்படையில் இதனைச் சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.