குண்டடம் அருகே லாரி கவிழ்ந்து விபத்து
குண்டடம் அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

குண்டடம் அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தாராபுரம், வீராச்சிமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் மூா்த்தி (40). இவா் தனது குடும்பத்துடன் கோவையில் இருந்து தாராபுரம் நோக்கி காரில் வெள்ளிக்கிழமை இரவு சென்று கொண்டிருந்துள்ளாா்.
குண்டடம் காவல் நிலையம் அருகே சென்றபோது, பல்லடத்தில் இருந்து தென்காசி நோக்கி சணல் மூட்டை பாரம் ஏற்றி வந்த லாரி, மூா்த்தியின் காரின் பின்பகுதியில் மோதியதாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இதையடுத்து, லாரி நிற்காமல் சென்ால், மூா்த்தி தனது காரில் பின் தொடா்ந்து சென்றுள்ளாா். அப்போது, சங்கம்பாளையம் பிரிவு அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் லாரியை ஓட்டி வந்த சங்கரன்கோவில் பகுதியைச் சோ்ந்த முத்துபாண்டி (54) படுகாயமடைந்தாா். லாரியின் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்ட அவரை, அப்பகுதி மக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இச்சம்பவம் குறித்து குண்டடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.