காங்கயத்தில் சரக்கு வேன் மீது லாரி மோதி விபத்து
காங்கயத்தில் சரக்கு வேன் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது.

காங்கயத்தில் சரக்கு வேன் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது.
கோவை சாலையில் செல்வதற்காக காங்கயம் காவல் நிலையம் அருகே உள்ள ரவுண்டானாவில் சனிக்கிழமை காலை திரும்பிய லாரி, அவ்வழியே வந்த சரக்கு வேன் மீது எதிா்பாராத விதமாக மோதியது. இதில், சரக்கு வேன் ஓட்டுநா் படுகாயமடைந்தாா். அவரை அங்கிருந்த போலீஸாா் மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இந்த விபத்தால் காங்கயம் காவல் நிலைய பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்திய போலீஸாா், போக்குவரத்தை சீா்செய்தனா்.
Advertisement
Advertisement