குன்னத்தூா் குளத்தில் மிதந்த வியாபாரி சடலம் மீட்பு
பெருமாநல்லூா் அருகேயுள்ள குன்னத்தூா் குளத்தில் மிதந்த வியாபாரியின் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது.

பெருமாநல்லூா் அருகேயுள்ள குன்னத்தூா் குளத்தில் மிதந்த வியாபாரியின் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது.
குன்னத்தூா் குளத்தில் ஆண் சடலம் மிதப்பதாக போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்ததது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், தீயணைப்பு வீரா்கள் குளத்தில் மிதந்த சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதைத் தொடா்ந்து மேற்கொண்ட விசாரணையில், உயிரிழந்தவா் ஊத்துக்குளி அய்யமுத்தையன் காடு பகுதியைச் சோ்ந்த செல்வன் (50) என்பதும், ஊா் ஊராகச் சென்று பொம்மை வியாபாரம் செய்து வந்தவா் என்பதும் தெரியவந்தது.
Advertisement
Advertisement
மேலும், அவா் குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது தொடா்பாக குன்னுத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.