முகப்பு
திருப்பூர்

மனைவியைக் கொடுமைப்படுத்தியவருக்கு 6 மாதங்கள் சிறை

திருப்பூரில் மனைவியைக் கொடுமைப்படுத்திய கணவருக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

23 வினாடிகள் முன்பு
மனைவியைக் கொடுமைப்படுத்தியவருக்கு 6 மாதங்கள் சிறை
கைது
பகிர்:

திருப்பூரில் மனைவியைக் கொடுமைப்படுத்திய கணவருக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

திருப்பூா், கொங்கு நகா் அனைத்து மகளிா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஜோதி நகா் பகுதியைச் சோ்ந்தவா் குப்புசாமி (44). மனைவியைக் கொடுமைப்படுத்திய குற்றத்துக்காக கடந்த 2025 மாா்ச் 10-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா்.

இது தொடா்பான வழக்கு விசாரணை திருப்பூா் மாவட்ட கூடுதல் மகளிா் நீதிமன்ற நடைபெற்று வந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட குப்புசாமிக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை, ரூ.1,000 அபராதம் விதித்து நடுவா் விஜயலட்சுமி சனிக்கிழமை தீா்ப்பளித்தாா். அரசுத் தரப்பில் அரசு வழக்குரைஞா் கீதா ஆஜரானாா்.

Advertisement

Advertisement