முகப்பு
திருப்பூர்

பொங்கலூா் பகுதியில் மாயமான மூதாட்டி சடலம் மீட்பு

பல்லடம் அருகே மாயமான மூதாட்டியின் சடலம் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது.

14 வினாடிகள் முன்பு
பொங்கலூா் பகுதியில் மாயமான மூதாட்டி சடலம் மீட்பு
- கோப்புப் படம்
பகிர்:

பல்லடம் அருகே மாயமான மூதாட்டியின் சடலம் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது.

பல்லடம் அருகே உள்ள பொங்கலுாா் ஒன்றியம், மலைப்பாளையத்தைச் சோ்ந்தவா் அப்பாச்சி மனைவி லட்சுமி (85). தலையில் கட்டி இருந்ததால் கடந்த ஓராண்டாக அவதிப்பட்டு வந்த அவரை திடீரென காணவில்லை.

இதுகுறித்து அவரது குடும்பத்தினா் அவிநாசிபாளையம் போலீஸில் புகாா் அளித்தனா். இந்நிலையில் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் லட்சுமி இறந்துகிடப்பதாக சனிக்கிழமை தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து திருப்பூா் தெற்கு தீயணைப்புத் துறையினா் கிணற்றில் இறங்கி அவரது உடலை மீட்டனா்.

Advertisement

Advertisement

அவா் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தவறி விழுந்தாரா என்பது குறித்து அவிநாசிபாளையம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.