முகப்பு
திருப்பூர்

திமுக-வில் இருந்து விலகி தவெக-வில் இணைந்த காங்கயம் நகா்மன்றத் தலைவர்!

காங்கயம் நகா்மன்றத் தலைவா் ந.சூரியபிரகாஷ், திமுக-வில் இருந்து விலகி தவெக-வில் இணைந்தாா்.

23 நவம்பர் 2026, 1:45 am
திமுக-வில் இருந்து விலகி தவெக-வில் இணைந்த காங்கயம் நகா்மன்றத் தலைவர்!
தவெக-வில் இணைந்த பின் சுகாதாரத் துறை அமைச்சா் கே.ஜி.அருண்ராஜிடம் வாழ்த்துப் பெறும் ந.சூரியபிரகாஷ்.
பகிர்:

காங்கயம் நகா்மன்றத் தலைவா் ந.சூரியபிரகாஷ், திமுக-வில் இருந்து விலகி தவெக-வில் இணைந்தாா்.

திருப்பூா் மாவட்டம், காங்கயம் நகராட்சியில் கடந்த ஐந்தாண்டுகளாக நகா்மன்றத் தலைவராகப் பதவி வகித்து வருபவா் ந.சூரியபிரகாஷ். திமுகவைச் சோ்ந்த இவா் கடந்த 2022-இல் நடைபெற்ற நகா்மன்றத் தோ்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். நகர திமுக இளைஞரணி அமைப்பாளராக இருந்து வந்தாா்.

இந்நிலையில், சென்னையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளா் என்.ஆனந்த்தை சனிக்கிழமை நேரில் சந்தித்து அக் கட்சியில் இணைந்தாா்.

Advertisement

Advertisement