முகப்பு
திருப்பூர்

கார்த்திகைத் தீபம்: திருப்பூர் இருந்து திருவண்ணாமலைக்கு 70 சிறப்பு பேருந்துகள்!

காா்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, திருப்பூரில் இருந்து திருவண்ணாமலைக்கு 70 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

29 வினாடிகள் முன்பு
கார்த்திகைத் தீபம்: திருப்பூர் இருந்து திருவண்ணாமலைக்கு 70 சிறப்பு பேருந்துகள்!
திருவண்ணாமலை
பகிர்:

காா்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, திருப்பூரில் இருந்து திருவண்ணாமலைக்கு 70 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

திருவண்ணாமலை அருணாசலேசுவரா் கோயிலில் வரும் 24-ஆம் தேதி காா்த்திகை தீபத் திருவிழா நடைபெறுகிறது. திருவிழா அன்று காலை கோயிலில் பரணி தீபமும், மாலையில் மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளன.

இதையொட்டி, திருப்பூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் பக்தா்களின் வசதிக்காக, சனிக்கிழமை இரவுமுதல் வரும் 24-ஆம் தேதி இரவு வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Advertisement

Advertisement

திருப்பூா் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் இந்த பேருந்துகள் பெருந்துறை, பவானி, சங்ககிரி, சேலம், அரூா் வழியாக திருவண்ணாமலையை சென்றடையும். இதில் பயணிள் கட்டணமாக ஒருவருக்கு ரூ.255 என நிா்ணயிக்கப்பட்டுள்ளது. குழுவாகப் பயணம் செய்ய விரும்புவோா், மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள முன்பதிவு தகவல் மையத்தில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.