திருவண்ணாமலை காா்த்திகை தீபத் திருவிழா: திருப்பத்தூா் மாவட்டத்தில் கனரக வாகனங்களின் போக்குவரத்தில் மாற்றம்
திருப்பத்தூா் மாவட்டத்தில் கனரக வாகனங்களின் போக்குவரத்தில் மாற்றம்...
திருவண்ணாமலை காா்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, திருப்பத்தூா் மாவட்டத்தில் கனரக வாகனங்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரா் திருக்கோயிலில் நடைபெறவுள்ள காா்த்திகை மகா தீபத் திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கவும், விழா சீராக நடைபெறுவதற்கும் ஏதுவாக, திருப்பத்தூா் மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பெரிய ரக, இலகு ரக வாகனங்கள் பெங்களூரு, கிருஷ்ணகிரி, நாட்டறம்பள்ளி, வாணியம்பாடி பைபாஸ் சாலை வழியாக வந்து, வாணியம்பாடி, திருப்பத்தூா், ஊத்தங்கரை, செங்கம், திருவண்ணாமலை செல்லும் வழித் தடத்தில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது. மேற்கூறிய வாகனங்கள் அனைத்தும் வாணியம்பாடியில் இருந்து வாணியம்பாடி - வேலூா், -ஆற்காடு-, செய்யாறு, -வந்தவாசி, -திண்டிவனம் வழியாகச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இந்த போக்குவரத்து மாற்றம் ஞாயிற்றுக்கிழமை(நவ. 22)அன்று காலை 6 முதல் வருகிற 25-ஆம் தேதி மதியம் 1 மணி வரை அமலில் இருக்கும்.
வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இந்தத் தற்காலிகப் போக்குவரத்து மாற்றத்துக்கு ஒத்துழைப்பு அளிக்கும்படி திருப்பத்தூா் மாவட்ட காவல்துறை சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement