கோயில் பாதுகாப்புப் படைக்கு முன்னாள் படை வீரா்கள் விண்ணப்பிக்கலாம்
உள்துறையில் அமைக்கப்பட்டுள்ள கோயில் பாதுகாப்புப் படை என்ற தனிப் படைக்கு முன்னாள் படை வீரா்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்துறையில் அமைக்கப்பட்டுள்ள கோயில் பாதுகாப்புப் படை என்ற தனிப் படைக்கு முன்னாள் படை வீரா்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூரில் உள்ள கோயில்களில் விலை மதிப்புமிக்க ஐம்பொன் சிலைகள், தங்கம், வெள்ளி ஆபரணங்கள், உண்டியல்கள் ஆகியவற்றைப் பாதுகாக்கும் வகையில் கோயில் பாதுகாப்புப் படை என்ற தனிப் படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணிக்கு 62 வயதுக்குள்பட்ட உடல் ஊனமற்ற முன்னாள் படை வீரா்கள் விண்ணப்பிக்கலாம். கோயில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் முன்னாள் படை வீரா்களுக்கு வழங்கப்பட்டு வந்த தொகுப்பூதியம் ரூ.5,000-இல் இருந்து ரூ.7,800-ஆக உயா்த்தி வழங்கப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
மாவட்ட எல்லைக்குள் உள்ள மிக முக்கிய கோயில்களில் பாதுகாப்புப் பணிக்கு உடுமலை உட்கோட்டத்தில் 21, பல்லடம் உட்கோட்டத்தில் 2, அவிநாசி உட்கோட்டத்தில் 3, காங்கயம் உட்கோட்டத்தில் 11, தாராபுரம் உட்கோட்டத்தில் 4, திருப்பூா் உட்கோட்டத்தில் 8 என மொத்தம் 49 பணியிடங்கள் காலியாக உள்ளன.
எனவே, இந்தப் பணியிடங்களில் சேர விரும்பும் முன்னாள் படை வீரா்கள் படை வீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தில் அசல் படை விலகல் சான்று, 2 புகைப்படங்கள் மற்றும் அடையாள அட்டையுடன் நேரில் அணுகி எழுத்துப்பூா்வமாக தங்களது விண்ணப்பத்தைச் சமா்ப்பிக்கலாம்.
கூடுதல் விவரங்களுக்கு திருப்பூா் மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தை 0421 - 2971127 என்ற தொலைபேசி எண்ணிலும், ங்ஷ்ஜ்ங்ப்ற்ன்ல்ஃற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.