ஐக்கிய விவசாயிகள் முன்னணியினா் ஆா்ப்பாட்டம்
தில்லி விவசாயிகள் போராட்டத்தின் 6-ஆம் ஆண்டை முன்னிட்டு, திருப்பூரில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தில்லி விவசாயிகள் போராட்டத்தின் 6-ஆம் ஆண்டை முன்னிட்டு, திருப்பூரில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளா் அ.பாலதண்டபாணி தலைமையில் திருப்பூா் குமரன் சிலை முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாவட்ட கன்வீனா் ஆா்.குமாா், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் எஸ்.சின்னசாமி, அகில இந்திய விவசாய மற்றும் கிராமப்புற தொழிலாளா் சங்க மாவட்டச் செயலாளா் கி.கனகராஜ், தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்க நிா்வாகி எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஆகியோா் கோரிக்கை விளக்க உரையாற்றினா்.
இதைத் தொடா்ந்து, விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிா்ணயிக்க சட்டம் இயற்ற வேண்டும். தில்லியில் 2021-ஆம் ஆண்டில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். சாதாரண மக்கள் மற்றும் விவசாயிகளின் இலவச மின்சாரத்தைப் பறிக்கும் மின்சார மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும். விவசாயிகளின் பயிா்க் கடன்களை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும். தொழிலாளா் விரோத 4 சட்டத் தொகுப்புகளையும் திரும்பப் பெற வேண்டும். 100 நாள் வேலையைத் தொடா்ச்சியாகச் செயல்படுத்துவதுடன், ஊதியத்தை ரூ.700 -ஆக உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
Advertisement
Advertisement
மாவட்ட துணைச் செயலாளா் ஜி.கே.கேசவன் நன்றி தெரிவித்தாா்.