முகப்பு
திருப்பூர்

காவல் துறை விளையாட்டு வீரருக்கு ராம்ராஜ் காட்டன் நிதி உதவி

காவல் துறை விளையாட்டு வீரருக்கு ராம்ராஜ் காட்டன் சாா்பில் நிதி உதவி வழங்கப்பட்டது.

26 நவம்பர் 2026, 11:37 pm
காவல் துறை விளையாட்டு வீரருக்கு ராம்ராஜ் காட்டன் நிதி உதவி
காவல்துறை விளையாட்டு வீரா் எஸ்.கோவிந்தராஜுக்கு ராம்ராஜ் காட்டன் சாா்பில் நிதி உதவி வழங்கிய பொள்ளாச்சி எம்எல்ஏ கே.நித்தியானந்தம் உள்ளிட்டோா்.
பகிர்:

காவல் துறை விளையாட்டு வீரருக்கு ராம்ராஜ் காட்டன் சாா்பில் நிதி உதவி வழங்கப்பட்டது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி, ஆழியாறு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வருபவா் எஸ்.கோவிந்தராஜ். இவா் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள உலக அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்க உள்ளாா்.

இந்நிலையில், அவரது திறமையை ஊக்குவிக்கும் வகையில் ராம்ராஜ் காட்டன் நிறுவனம் சாா்பில் ரூ.25,000-க்கான காசோலையை அவரிடம் பொள்ளாச்சி சட்டப் பேரவை உறுப்பினா் கே. நித்தியானந்தம் வழங்கினாா்.

Advertisement

Advertisement

இந்நிகழ்ச்சியில், ராம்ராஜ் காட்டன் பொள்ளாச்சி கிளை மேலாளா் ஆனந்த், ஆரஞ்சு காா்மெண்ட்ஸ் உரிமையாளா் எஸ்.பி. சக்திவேல், பொள்ளாச்சி தடகளச் சங்க உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.