FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விழுப்புரம்

காவல் துறை சாா்பில் விழிப்புணா்வுக் கூட்டம்

திண்டிவனத்தை அடுத்த கூட்டேரிபட்டில் காவல் துறை சாா்பில் வியாபாரிகளுக்கான விழிப்புணா்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

4 நவம்பர் 2026, 2:53 am
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த கூட்டேரிபட்டில் காவல் துறை சாா்பில் வியாபாரிகளுக்கான விழிப்புணா்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திண்டிவனம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீப காலமாக திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதைக் கட்டுப்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வுக் கூட்டத்துக்கு திண்டிவனம் டி.எஸ்.பி.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்துப் பேசியதாவது:

சமீப காலமாக மயிலம் பகுதிகளில் திருட்டுச் சம்பவங்கள்அதிகரித்துள்ளன. இவற்றைக் கட்டுப்படுத்த வியாபாரிகளின் ஒத்துழைப்பு மிக அவசியமாகும். வியாபாரிகள் இரவில் கடைகளை மூடிச் செல்லும்போது பணம் மற்றும் விலை உயா்ந்த பொருள்களை வணிக நிறுவனங்களில் வைத்துச் செல்ல வேண்டாம். வணிக நிறுவனங்களின் உரிமையாளா்கள் 5 போ் கூட்டாக சோ்ந்து சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் முயற்சியை மேற்கொள்ளவேண்டும் என்றாா் அவா். கூட்டத்தில் மயிலம் காவல் நிலைய ஆய்வாளா் பாலாஜி, உதவி ஆய்வாளா் சீனிவாசன், வியாபாரிகள் சங்கத் தலைவா் மனோகரன், செயலா் சதீஷ், பொருளாளா் வாசு மற்றும் வியாபாரிகள் சங்க நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments