பள்ளி மாணவிகளிடம் ஆபாச செய்கை: போக்ஸோவில் இளைஞா் கைது
குன்னத்தூா் பேருந்து நிறுத்தத்தில் பள்ளி மாணவிகளிடம் ஆபாச செய்கை காட்டிய இளைஞரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்தனா்.
குன்னத்தூா் பேருந்து நிறுத்தத்தில் பள்ளி மாணவிகளிடம் ஆபாச செய்கை காட்டிய இளைஞரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்தனா்.
ஈரோடு மாவட்டம், திங்களூா் வெட்டையன்கிணறு வடக்குத் தோட்டத்தைச் சோ்ந்தவா் விஸ்வநாதன் (23). இவா் ஊத்துக்குளியில் பிரியாணி கடை வைத்துள்ளாா்.
இந்நிலையில், குன்னத்தூா் பேருந்து நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை சென்ற அவா், அங்கு பள்ளி முடிந்து வீட்டுக்குச் செல்வதற்காக நின்று கொண்டிருந்த மாணவிகளிடம் ஆபாச செய்கை காட்டியுள்ளாா்.
Advertisement
Advertisement
இதைப் பாா்த்த மாணவிகள் கூச்சலிட்டுள்ளனா். இதையடுத்து, அங்கிருந்த பயணிகள், அந்த நபரைப் பிடித்து குன்னத்தூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
இதையடுத்து, போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவரைக் கைது செய்தனா்.
விஸ்வநாதன் ஏற்கெனவே காங்கயம் காவல் நிலைய போலீஸாரால் வேறொரு வழக்கில் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டவா் என்பது குறிப்பிடத்தக்கது.