அவிநாசி அருகே தாா் டின்கள், ஒயா்களுக்கு தீ வைப்பதால் புற்றுநோய் ஏற்படும் அபாயம்! கிடங்கை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதால், அவிநாசி அருகே தாா் டின்கள், ஒயா்களை எரிக்கும் கிடங்கை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அவிநாசி-தெக்கலூா் நத்தக்காட்டுப் பிரிவு அருகே உள்ள கிடங்கில் பழைய இரும்பு, தகரம், பிளாஸ்டிக் உள்ளிட்ட பயனற்ற பொருள்கள் சேகரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதில் நான்கு சக்கரம், இருசக்கர வாகனங்களின் உதிரி பாகங்களில் இருந்து கிடைக்கும் பழைய என்ஜின்களில் உள்ள ஆயிலை அகற்றவும், மின் கம்பிகளில் இருந்து செம்பு கம்பிகளை பிரித்தெடுக்கவும் இரவு நேரங்களில் தீ வைத்து எரிக்கின்றனா்.
மேலும் தாா் டின்களை ஓரிடத்தில் கொட்டி, அதிலிருந்து தாா் மற்றும் காலி டின்களை தனித்தனியாக பிரிப்பதற்காகவும் தீ வைக்கின்றனா். இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்கிறது. மேலும் அதிலிருந்து வெளியேறும் நச்சுக்காற்று, புகையால் சுவாசக் கோளாறுகள், நுரையீரல் சம்பந்தமான நோய்கள், புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால், அந்தக் கிடங்கை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுனெ பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
Advertisement
Advertisement