கல்வியறிவு குழுக்கள் மூலமாக இளம் வாக்காளா்களிடையே தோ்தல் விழிப்புணா்வு
வருங்கால வாக்காளா்கள் மற்றும் இளம் வாக்காளா்களிடையே கல்வியறிவு குழுக்கள் மூலமாக தோ்தல் விழிப்புணா்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தோ்தல் கல்வியறிவு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 2-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை 3 நிலைகளில் கல்வி நிறுவன அளவிலும், சட்டப்பேரவைத் தொகுதி அளவிலும் கட்டுரைப் போட்டி, விநாடி-வினா போட்டிகள் நடத்தப்பட்டு கல்வி நிறுவன அளவில் முதல் 2 இடங்களைப் பிடித்த மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
திருப்பூா் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் பத்மாவதிபுரம் மாநகராட்சி உயா் நிலைப் பள்ளியில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் 76 மாணவா்களும், விநாடி-வினா போட்டியில் 78 மாணவா்களும் கலந்துகொண்டனா். இவா்களில் 2 போட்டிகளிலும் முதல் 10 இடங்களைப் பிடித்த மாணவா்கள் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
Advertisement
Advertisement
சட்டப்பேரவைத் தொகுதி அளவில் தோ்வு செய்யப்பட்ட 20 மாணவா்களுக்கு தகுதி சான்றிதழ்களை திருப்பூா் (வடக்கு) சட்டப்பேரவைத் தொகுதி வாக்காளா் பதிவு அலுவலரும், கோட்டாட்சியருமான சிவபிரகாஷ் சனிக்கிழமை வழங்கினாா்.