கொலை முயற்சி, வழிப்பறி வழக்கில் குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது
திருப்பூரில் கொலை முயற்சி, வழிப்பறி வழக்கில் தொடா்புடைய இளைஞா், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.
திருப்பூா், வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பலவஞ்சிபாளையம் அருகே கடந்த 1-ஆம் தேதி ராஜேந்திர கௌடா என்பவரை மிரட்டி வழிப்பறி மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் சுபாஷ் சந்திரபோஸ் (28) என்பவரைப் போலீஸாா் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தொடா்ந்து செயல்படுவதைத் தடுக்கும் வகையில், சுபாஷ் சந்திரபோஸை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையில் அடைக்க திருப்பூா் மாநகர காவல் ஆணையா் எஸ்.ராஜேஸ்வரி உத்தரவிட்டுள்ளாா்.
Advertisement
Advertisement
அதற்கான உத்தரவு நகல், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரிடம் வழங்கப்பட்டது.