குண்டா் தடுப்பு சட்டத்தில் இளைஞா் கைது
ஆள்கடத்தலில் ஈடுபட்டதாக குண்டா் தடுப்புச் சட்டத்தில் இளைஞா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
ஆத்தூா் நகர காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கடந்த செப். 12 அன்று ஆள்கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டதாக சுரேஷ் (33) என்பவரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இவா் மீது சேலம் மாவட்டம், மற்றும் சேலம் மாநகரப் பகுதியில் ஆள்கடத்தல் உள்ளிட்ட பல குற்றவழக்குகள் உள்ளன. இதையடுத்து, சேலம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.குத்தாலிங்கம் பரிந்துரையின் பேரில், சேலம் மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் உத்தரவின் பேரில், சுரேஷ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.
Advertisement
Advertisement